மீனாட்சி அம்மன் கோவில் அருகே இரவு நேரங்களில் மாடுகள் வெட்டப்படுகிறதா? - அரசு விளக்கம்

2 months ago 11

சென்னை,

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மதுரையில் உள்ளது. அங்கு வீற்றிருக்கும் மீனாட்சி அம்மனை தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் மிக அருகில் இரவு நேரங்களில் மாடுகளை வெட்டும் கும்பல் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில்,

"இது முற்றிலும் வதந்தி. மீனாட்சி அம்மன் கோவில் மேல கோபுரம் அருகே வசித்து வரும் சிவராமன் (வயது 59) என்ற சாமியாடி தனக்கு வரும் காணிக்கையை சேர்த்து ஒவ்வொரு ஆண்டும் ஆடுகளை அறுத்து அன்னதானம் கொடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 7-ந்தேதியும் தனது வீட்டின் மாடியில் ஆடுகளை அறுத்து அன்னதானம் கொடுத்துள்ளார். அப்போது ஆடு உரிக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக பரப்பி வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article