மீண்டும் பார்முக்கு திரும்பிய ரோகித்.. 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தல்

1 month ago 9

கட்டாக்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் கில் நிதானமாக விளையாட ரோகித் அதிரடியாக விளையாடி வருகிறார். சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி வெறும் 30 பந்துகளில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து சொதப்பி வந்ததால் பெரும் விமர்சனங்களை சந்தித்த அவர் நீண்ட நாட்கள் கழித்து பார்முக்கு திரும்பி தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது வரை இந்தியா 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் 53 ரன்களுடனும், கில் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தியா வெற்றி பெற இன்னும் 228 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது.

Read Entire Article