
வலென்சியா,
நடிகர் அஜித்குமார், சொந்தமாக கார் ரேஸ் அணியை வைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார். அதில் காயம் ஏதும் இன்று அவர் உயிர்தப்பினார்.
இந்நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Porsche Sprint Challenge) நடிகர் அஜித் கலந்து கொண்ட நிலையில் அவர் இயக்கிய கார் விபத்துக்குள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக ஸ்பெயினின் வலென்சியா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார். அப்போது முந்தி செல்ல முயன்ற பொழுது மற்றொரு கார் குறுக்கே வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. கார் குறுக்கே வந்ததால் அஜித் இயக்கிய கார் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித் உயிர் தப்பியுள்ளார். அஜித்துக்கு எந்த பாதிப்பும் இல்லை அவர் நலமாக இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.