மீண்டும் இணையும் தனுஷ் - நித்யா மேனன்!

3 months ago 22

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'பா. பாண்டி' திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் உருவான 2-வது திரைப்படம் 'ராயன்'. இந்த திரைப்படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

தனுஷின் 50-வது படமாக உருவாகிய 'ராயன்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜுலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தனுஷ் 'குபேரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார். இதற்கிடையே, தனுஷ் தனது 52-வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இது தனுஷ் இயக்கும் 4வது படமாகும். இத்திரைப்படத்தை டாவ்ன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கு 'இட்லி கடை' என பெயரிடப்பட்டுள்ளது. 

அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 'இட்லி கடை' படத்தில் நடிப்பதாக நித்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இவர் தனுஷுடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article