மீண்டும் இணையும் ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா?

4 months ago 15

சென்னை,

கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரிப்பில் சாய் ராஜேஷ் இயக்கிய இப்படம் சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் சவுத் 2024 விருதுகளில் எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 5 விருதுகளை அள்ளியது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை #90ஸ் என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமான ஆதித்யா ஹாசன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேபி படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்த ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைய இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Read Entire Article