மீண்டும் அந்த இயக்குனருடன் இணையும் தனுஷ் - படத்தின் பெயர் இதுவா?

3 hours ago 2

சென்னை,

தமிழில் தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் வரை படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கி இருந்த இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார்.

இத்திரைப்படமும் உலகளவில் ரூ.110 கோடி வசூலித்தது. இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்திற்கு 'ஹானஸ்ட் ராஜ்' என பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தற்போது இயக்கி நடித்து வரும் படம் 'இட்லி கடை'. இது ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

Read Entire Article