பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் க.சுந்தரம். இவர், கடந்த திமுக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் கடந்த 18ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, மீஞ்சூரில் உள்ள எழில் திருமண மாளிகையில் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் படத் திறப்புவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பகலவன் வரவேற்றார். இதில் அமைச்சர்கள் ராணிப்பேட்டை ஆர்.காந்தி, ஆவடி சா.மு.நாசர், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளரும் பூந்தமல்லி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் திமுக தலைமை கழக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு பங்கேற்று, முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் முழு திருவுருவப் படத்தைத் திறந்துவைத்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதில், துணை பொது செயலாளர் அந்தியூர் செல்வராஜ், அமைச்சர்கள் பெரியகருப்பன், சி.வி.கணேசன், மதிவேந்தன், சென்னை மாநகராட்சி துணைமேயர் மகேஷ்குமார், கிரிராஜன் எம்பி, எம்எல்ஏக்கள் பொன்னேரி துரை சந்திரசேகர், திருவொற்றியூர் கே.பி.சங்கர், திருத்தணி எஸ்.சந்திரன், சமக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொன்னேரி நகரமன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணை தலைவர் அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் நினைவலைகள் பற்றிய கண்காட்சி கருத்தரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் அனைத்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கண்காட்சியை சுற்றி வந்து பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் க.சுந்தரத்தின் மனைவி எழிலினி, மகன்கள் டாக்டர் செந்தில் ராஜ்குமார், மீஞ்சூர் பேரூர் செயலாளர் க.சு.தமிழ் உதயன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழ்பிரியன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
The post மீஞ்சூரில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் படத் திறப்புவிழா: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.