'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்'படத்தின் 'நீ நான்' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது

2 weeks ago 2

சென்னை,

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 1985 முதல் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கடுத்து 2023-ல் தயாரித்த 'வல்லவனுக்கும் வல்லவன்' கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது இந்த தயாரிப்பு நிறுவனம் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்த லஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 'பிரன்ட்ஷிப், கூகுள் குட்டப்பா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹரி பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 101-வது படமான இதை, ஹேமா ருக்மணி தயாரிக்கிறார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. இப்படத்தின் 'பாய் பெஸ்ட்டி' பாடல் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் லாஸ்லியா நடித்த 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தின் 'நீ நான்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகிறது.

Heartfelt thanks for the wishes sir https://t.co/9W27jbZVG9

— Thenandal Films (@ThenandalFilms) January 23, 2025
Read Entire Article