மியாமி ஓபன் டென்னிஸ்; டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

2 days ago 2

புளோரிடா,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளாரிடாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினி உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்த்தை வெளிப்படுத்திய பிரிட்ஸ் 7-5, 6-7 (9-7), 7-5 என்ற செட் கணக்கில் பெரெட்டினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் பிரிட்ஸ், செக் குடியரசின் ஜக்குப் மென்சிக் உடன் மோத உள்ளார். 

Read Entire Article