மின்வேலி அமைத்து வனவிலங்கு வேட்டையாடிய விவசாயிக்கு அபராதம்

1 month ago 11

தேன்கனிக்கோட்டை, செப்.29: ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகம், கோட்டையூர் பிரிவு வனவர் தமிழ்வாணன் தலைமையில், வன பணியாளர்கள் நேற்று காலை, பிலிக்கல் பேல்பட்டி வனப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கரகேகவுடு(31) என்பவர், தனது விவசாய நிலத்திற்கு அருகே மின் கம்பத்திலிருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து, கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பிடித்து உரிகம் வனச்சர அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மின்கம்பியில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சி வன விலங்குகளை வேட்டையாட முயன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு ₹25 ஆயிரம் அபராதம் வசூலித்து, எச்சரித்து விடுவித்தனர்.

The post மின்வேலி அமைத்து வனவிலங்கு வேட்டையாடிய விவசாயிக்கு அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article