
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பவர்பிளேயான முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 56 ரன்கள் அடித்தது.
அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 32 ரன்களில் (16 பந்துகள்) நூர் அகமது பந்துவீச்சில் மகேந்திரசிங் தோனியால் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வரை பெங்களூரு அணி 8 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் அடித்துள்ளது. கோலி 12 ரன்களுடனும், ரஜத் படிதார் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். படிக்கல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.