மின்சாரத் தடையால் இருளில் மூழ்கிய ஸ்பெயின், போர்ச்சுகல்: மக்கள் கடும் அவதி

4 hours ago 3

ஸ்பெயின்: ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸின் சில பகுதிகளில் வரலாறு காணாத அளவில் திடீரென்று மின்தடை ஏற்பட்டதால் இருளில் மூழ்கியது. சீன பகுதிகளில் மின்வெட்டு சீரான நிலையில், எஞ்சிய இடங்களில் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸின் சில பகுதிகளில் நேற்று மின்சார விநியோகம் தடைப்பட்டது. இதனால் போக்குவரத்து சிக்னல்கள் இயங்காததால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றனர்.

போர்ச்சுக்கலிலும் சிக்னல்கள் செயல்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லிஸ்பன், போர்டோ நகரங்களில் மெட்ரோ ரயில்களும், மின்சார ரயில் சேவையும் தடைப்பட்டன. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. வணிக நிறுவனங்களில் பணம் செலுத்த முடியாமல் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகின. மின் தடையால் டென்னிஸ் போட்டியும் பாதிப்புக்குள்ளாகியது. டென்னிஸ் கோர்டில் மின்விளக்குகள் ஏரியாததால் போதிய வெளிச்சம் இல்லாத நிலை ஏற்பட்டது.

சுவிட்ஸர்லாந்து வீராங்கனையை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனையின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதேபோல ஆடவர் போட்டியும் ஸ்பைடர் கேமரா மின்சாரம் இன்றி செயல்படாததால் பாதியில் தடைப்பட்டது. நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடை அச்சத்தால் மக்கள் உணவு பொருட்களை வாங்கி குவிக்க சூப்பர் மார்க்கெட்க்கு படையெடுத்தனர். நாடு தழுவிய அளவில் திடீர் மின்வெட்டுக்கு காரணம் என்னவென விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்பெயின் பிரதமர் கூறினார்.

The post மின்சாரத் தடையால் இருளில் மூழ்கிய ஸ்பெயின், போர்ச்சுகல்: மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article