மின்சார ரயில் சேவை ரத்து

3 days ago 2

செங்கல்பட்டு: சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையை, பள்ளி கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோர் தினசரி பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழித்தடத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் முழுமையாக அல்லது பகுதியாக மின்சார ரயில் ரத்து செய்யப்படும். சில நேரங்களில் வழித்தடங்கள் மாற்றி இயக்கப்படும். இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்வதன் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15, இரவு 9.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மதியம் 1.45, பிற்பகல் 2.20, 3.05, மாலை 4.05, 4.35, இரவு 11 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் செங்கல்பட்டு – சிங்கபெருமாள் கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

The post மின்சார ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article