சென்னை : சென்னையில் மின்சார கார்களை தயாரிக்க ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அமெரிக்க பயணத்தின் போது விடுத்த அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்திருந்தது. சென்னையை அடுத்த மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் ஃபோர்டு கார் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட உள்ளன. இந்த நிலையில் அங்கு மின்சார கார்களை உற்பத்தி செய்ய ஃபோர்டு நிறுவனம் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், கருத்து தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வாகனத் துறையில் தற்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப மின்சார கார் உற்பத்தியில் ஃபோர்டு ஈடுபடலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே டாடா, வியட்நாமின் வின்பாஸ்ட் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மின்சார கார்களை தயாரித்து வருகின்றன. இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி மையமாக தமிழ்நாடு தன்னை முன்னிறுத்தியதை தொடர்ந்து, புதிய முதலீடுகளை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!! appeared first on Dinakaran.