மிகத் தரமான, தைரியமான திரைப்படம் 'நந்தன்' – நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

2 months ago 11

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக தெரிவித்துள்ளது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நந்தன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் பாராட்டினர்.

மேலும் சசிகுமார், பாலாஜி சக்திவேல் ஆகியோரது நடிப்பும் பாராட்டைப் பெற்றது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சீமான், அண்ணாமலை, அன்புமணி , விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் மற்றும் திரைப்பிரபலங்கள் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டினர். இந்நிலையில் 'நந்தன்' திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதனையடுத்து 'நந்தன்' திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் இரா.சரவணன், நடிகர் சசிகுமார் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'நந்தன் மிகத் தரமான, தைரியமான, படம்' என மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 'நந்தன்' திரைப்படம் அமேசான் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

Read Entire Article