மாவுத்தம்பதி ஊராட்சியில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.26 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்

1 month ago 11

மதுக்கரை, செப்.29: கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாவுத்தம்பதி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு செல்லும் சாலை பழுதாகி, குண்டும் குழியுமாக இருந்து வந்தது.

இதனால் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று வரும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இதனால் இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என்று மாவுத்தம்பதி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்து அதன் மூலம் சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் பணியை துவக்கி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது சாலை புதுப்பிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. புதுப்பிக்கும் பணியை மாவுத்தம்பதி ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செந்தில்குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது ஊராட்சி செயலாளர் மதுமிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மாவுத்தம்பதி ஊராட்சியில் நான் முதல்வன் திட்டத்தில் ரூ.26 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article