"மாவுக்கட்டு போட்டு விட்டும் திருந்தாத டூவீலர் திருடன்".. வாக்கிங் ஸ்டிக்கோடு வந்து மீண்டும் டூவீலர்களை திருடிய விற்ற நபர் கைது

3 months ago 21
தாம்பரத்தில் 4 டூப்ளிகேட் சாவிகளை தயாரித்து வைத்து 25 நாட்களில் 15 டூவீலர்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். தொடர் திருட்டு தொடர்பாக சி.சி.டி.வி பதிவைக் கைப்பற்றி விசாரணை நடத்திய போலீஸார், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த அய்யனார் கையில் வாக்கிங் ஸ்டிக்கோடு வந்து திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். ஏற்கனவே, தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததால் மாவுக்கட்டு போடப்பட்ட அய்யனார், திருடும் டூவீலர்களை சிறையில் இருக்கும் போது பழக்கமான திண்டிவனத்தைச் சேர்ந்த விஜயிடம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து விஜயையும் கைது செய்து 12 டூவீலர்கள் மீட்கப்பட்டன.
Read Entire Article