பந்தலூர், ஜன,14: பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஸ் தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் ஞானசேகர் வரவேற்று பேசினார். இதில், அனைத்து மத போதகர்கள், தோழமை கட்சியை சார்ந்தவர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
ஒன்றிய துணை செயலாளர்கள் மகாலிங்கம், சுபாஷினி, ஒன்றிய பொருளாளர் முகம்மது ரபி, மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், அறிவுமணி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஜெயந்தி கருப்பசாமி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ராமசந்திரன், மைமுனா, ஈஸ்வரன், மஹேந்திரன், உம்மர், ஜெயக்குமார் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கிளை கழக பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில், விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இறுதியாக கிளை செயலாளர் தயானந்தன் நன்றி கூறினார்.
The post மாவட்டம் பந்தலூரில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் appeared first on Dinakaran.