மாவட்டத்தில் சாரல் மழை

2 months ago 13

 

தர்மபுரி, நவ. 18: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சாலையில் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்தபடியும் சென்றனர். மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: தர்மபுரி 2, பாலக்கோடு 10.2, மாரண்டஹள்ளி 17, ஒகேனக்கல் 24.6, அரூர் 8.4, பாப்பிரெட்டிப்பட்டி 1.2 என மொத்தம் 63.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தொடர்ந்து மழையால் சீதோஷ்ண நிலை மாறியதால், பொதுமக்கள் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும், காய்ச்சல் தொந்தரவு ஏதேனும் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மக்கள் அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

The post மாவட்டத்தில் சாரல் மழை appeared first on Dinakaran.

Read Entire Article