பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் துறை சார்ந்த 5 துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 10 பேர் என மொத்தம் 15 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் மதுமதி அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி சென்னைக்கும், ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா மதுரைக்கும், திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோட்டி திருப்பத்தூருக்கும், ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர் உஷா திண்டுக்கல்லுக்கும், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் சம்பத் தொடக்கக் கல்வி துணை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் முருகம்மாள் பெரம்பலூருக்கும், விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் அமுதா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் துணை இயக்குநராகவும், பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் கரூருக்கும், தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார் விருதுநகருக்கும், நீலகிரி முதன்மைக்கல்வி அலுவலர் கீதா மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் துணை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதுதவிர தனியார் பள்ளிகள் துணை இயக்குநர் சின்னராஜூ ராமநாதபுரம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் துணை இயக்குநர் சரஸ்வதி ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வி துணை இயக்குநர் சுப்பாராவ் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் துணை இயக்குனர் அண்ணாதுரை தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தின் துணை இயக்குநர் முத்துசாமி பள்ளிக்கல்வித் துணை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
The post மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் 10 பேர் திடீர் இடமாற்றம் appeared first on Dinakaran.