தோகைமலை, அக். 1: கரூர் மாவட்டம் தோகைமலையில் நாகனூர் ஊராட்சி நல்லாகவுண்டம்பட்டி பகுதி பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். தோகைமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அழகேசன், முனியப்பன் முன்னிலை வகித்தனர்.
இதில், நாகனூர் ஊராட்சி நல்லாக்கவுண்டம்பட்டியில் உள்ள குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும், கழிவறையுடன் கூடிய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும், அனைத்து 100 நாள் பணியாளர்களுக்கும் தொடர்ந்து பணிகளை வழங்க வேண்டும், இதற்கு கூலியாக ரூ.319 வழங்க வேண்டும், நாகனூர் ஊராட்சியை புதியதாக உதயமாக உள்ள பேரூராட்சியில் இணைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பேசினர்.
பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை தோகைமலை ஒன்றிய மேலாளர் சரவணமூர்த்தியிடம் வழங்கினர். மனுவை, ஒன்றிய ஆனையரிடம் வழங்கப்படும். பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு தாங்களுடைய கோரிக்கை மனுவை அறிக்கையாக அனுப்பப்படும். அதனை தொடர்ந்து பணிகள் நிறைவேற்றுவது சம்மந்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இந்ந போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் முருகேசன், மணி, ராசம்மாள், இந்திராணி, சிறும்பாயி, ரத்தினம், இந்துமதி, தனலட்சுமி, தங்கம்மாள், அன்னக்கிளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post மாவட்ட அளவில் சாதனை நல்லக்கவுண்டம்பட்டி விவசாயிகள் ஒன்றிய அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.