மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டி நாகர்கோவிலில் அக்.6ல் நடக்கிறது

3 months ago 25

நாகர்கோவில், செப்.29: நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான மூத்தோர் தடகளப்போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். பங்குபெரும் விளையாட்டு வீரர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.இதில் 30 வயது முதல் 100 வயது வரை உள்ள. ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். வீரர்கள் ஏதேனும் 4 விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ளலாம். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் V.O.C பார்க் ஸ்டேடியத்தில் டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மூத்தோர் தடகள போட்டியில் ஆர்வமுடையவர்கள் தங்களது பெயரினை அக்டோபர் 5 ஆம் தேதிக்கு முன்பாக பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு 9952128574, 9442171664 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இதில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ ஓட்டப்பந்தயம், 3000 மீ நடைப்போட்டி, குண்டு எறிதல் சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளது.

The post மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டி நாகர்கோவிலில் அக்.6ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article