
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சித்திரங்குடியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தங்கவேல். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அங்கு வந்த காவலர் ஒருவர் மதுபோதையில் தங்கவேலின் கையை இரும்பு ராடால் அடித்து உடைத்த செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுபோதையில் தாக்குதல் நடத்திய காவலர் லிங்குசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. யார் நீங்கள்? என்று கேட்டதற்காக தாக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இதனையடுத்து சிஐடி காவலர் லிங்குசாமியை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிரப்பித்தார்.