சென்னை: மாற்றுத்திறனாளி நலத்துறை 1433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில்; மாற்றுத்திறனாளி நலத்துறை 1433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் நியமன பதவி வழங்கும் வகையில் நடப்பு கூட்டத்தொடரில் சட்ட முன் வடிவு கொண்டு வரப்படும்.
மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடன் இயல்புநிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள் (Smart Vision Glasses), அறிவுசார் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கற்பிக்கும் உபகரணப் பெட்டகம் (TLM Kit) நிற்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். என்று தெரிவித்துள்ளார்.
The post மாற்றுத்திறனாளி நலத்துறை 1433 கோடி ரூபாய் ஒதுக்கீடு: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு! appeared first on Dinakaran.