மார்வெலின் 'டேர்டெவில்: பார்ன் அகெய்ன்' தொடரின் டீசர் வெளியானது

2 months ago 11

சென்னை,

மார்வெல் நிறுவனத்தின் கீழ் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'டேர்டெவில்: பார்ன் அகெய்ன்'. இதில், முன்பு வெளியான டேர்டெவில் தொடரில் நடித்திருந்த சார்லி காக்ஸ், வின்சென்ட் டி ஓனோப்ரியோர் அதே கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் இவர்களுடன், மார்கரிட்டா லெவிவா, டெபோரா ஆன் வோல், எல்டன் ஹென்சன், நிக்கி எம் ஜேம்ஸ், ஜென்னேயா வால்டன், ஆர்ட்டி ப்ரூஷன், கிளார்க் ஜான்சன், மைக்கேல் காண்டோல்பினி, அய்லெட் ஜூரர், வில்சன் பெத்தேல் மற்றும் ஜெர்மி இயர்ல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த தொடர் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான டேர்டெவில் தொடரின் தொடர்ச்சியாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் குஸ்டா, ஜெப்ரி நாச்மனோப், டேவிட் பாய்ட் ஆகியோர் இயக்கும் இந்த தொடரின் சீசன் 1-ல் ஒன்பது எபிசோடுகள் உள்ளதாக தெரிகிறது. 

இந்த தொடரின் ரிலீஸ் தேதியை இதில் நடிக்கும் சார்லி காக்ஸ், வின்சென்ட் டி ஓனோப்ரியோர் வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி, 'டேர்டெவில்: பார்ன் அகெய்ன்' அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது இந்த தொடரின் முதல் டீசர் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

The first teaser for 'DAREDEVIL: BORN AGAIN' has been released.Premiering March 4 on Disney+ pic.twitter.com/qm6fetImYO

— DiscussingFilm (@DiscussingFilm) October 30, 2024
Read Entire Article