
சென்னை,
உடல் நலம் குறித்த மதிப்புமிக்க தகவல்களை அடிக்கடி தனது சமூக வலைதளம் மூலம் சமந்தா பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், பி.சி.ஓ.எஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் சார்ந்த ஊட்டச்சத்து நிபுணராண ராஷி சவுத்ரியுடன் சமீபத்தில் சமந்தா உரையாடல் நடத்தினார். அப்போது நடிகை சமந்தா உடலில் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கம் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி? என்று கேட்டார்.
அதற்கு ராஷி சவுத்ரி, "மார்பகங்கள் கனமாக உணருவது, முகப்பரு ஏற்படுவது, உடல் எடையை குறைக்க முடியவில்லை என்று நீங்கள் உணரும்போது, தைராய்டு பிரச்சினை போன்றவை இருந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது ' என்றார்.
இதனால் உடல்நல அபாயங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருப்பது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்காக அபாயத்தை அதிகரிக்கும் " என்கின்றனர்.
மேலும், அதை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது? என்பது குறித்து கூறுகையில், வறுத்த உணவுகள், இனிப்புகள், சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் கொழுப்புச்சத்தை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றனர்.
ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது, மன அழுத்தத்தை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் சில உணவுகளை தவிர்ப்பது ஈஸ்ட்ரோஜனை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு பொதுவான வழியாகும்.