ஊட்டி, பிப்.10: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வரும் மார்ச் 6ம் தேதி கலெக்டர் தலைமையில் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. 31.12.2024க்கு முன்னர் ஓய்வு பெற்று இதுவரை ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க பெறாதவர்கள் தங்களது குறைகள் பற்றிய விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் தயார் செய்து மாவட்ட கலெக்டர் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஆகியோருக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வருகின்ற 18ம் தேதிக்கு முன்னர் அனுப்பி வைப்பதோடு சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்களையும் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது. பார்சன்ஸ்வேலி அணையிலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீரும், உள்ளூரில் உள்ள பிற 9 நீர்த்தேக்கங்களிலிருந்து தினமும் 60 ஆயிரம் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது.
The post மார்ச் 6ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.