ஊட்டி, நவ.29: முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2000 ஆயிரம் கோடிக்கும் மேல் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதன் ஒரு பகுதியாக சிபிஎம் சார்பில் ஊட்டி புளூ மவுண்டன் பகுதியில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட குழு உறுப்பினர் மகேஷ் கண்டன உரையாற்றினார். மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சுகந்தன் வாழ்த்துரை வழங்கினார். இதில் ஒன்றிய அரசு ஆதரவாக செயல்பட கூடாது என கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத், குன்னூர் தாலுகா செயலாளர் இளங்கோ, ஊட்டி தாலுக்கா உறுப்பினர்கள் ராஜரத்தினம், புட்டுசாமி, மூத்த உறுப்பினர்கள் ஆல்துரை, லில்லிமா அடையாள குட்டன், பழனிச்சாமி, மூர்த்தி, முபாரக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் நன்றி கூறினார்.
The post மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊட்டியில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.