கிருஷ்ணகிரி, ஜன.14: வேப்பனஹள்ளி ஒன்றியம், வே.மாதேப்பள்ளி கூட்டுரோட்டில் இயங்கி வரும் மாருதி கல்வி நிறுவனங்ளின் சார்பில், சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஜெயராமன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் தனுஜா ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் மேகமாலா, செயலாளர் நவீன்குமார் கலந்து கொண்டு, 5க்கும் மேற்பட்ட பானைகளை வைத்து பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படையலிட்டனர். தொடர்ந்து மாடு- கன்றுகளுக்கு பூஜை போட்டனர். பின்னர், கோலப்போட்டி மற்றும் உரியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு நிறுவனர் ஜெயராமன், தாளாளர் தனுஜா ஜெயராமன், இயக்குனர் மேகமாலா, செயலாளர் நவீன்குமார் ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்தனர். விழா ஏற்பாடுகளை இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
The post மாருதி கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.