மாரியம்மன்கோயில் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

6 months ago 34

தஞ்சாவூர், அக்.1: புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் ஊராட்சியை மாநராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த, மாரியம்மன்கோவில் ஊராட்சி பகுதியில் வாழும் மக்களாகிய நாங்கள் பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்தும், வறிய நிலையிலும் அதிக அளவில் வசிக்கின்றோம். ஆகையால், மாரியம்மன்கோவில் ஊராட்சியை தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவு நிறைவேற்றப்பட்டால், 100 நாள் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2005) வேலை செய்யும் நாங்கள் வேலை இழந்து சிரமப்படும் சூழ்நிலையும், மேலும் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலையும் ஏற்படும். ஆகையினால் எங்கள் வாழ்வாதாரத்தினை கருத்தில்கொண்டு மாரியம்மன்கோவில் ஊராட்சியினை, மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவினை மறுபரிசீலனை செய்ய, ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மாரியம்மன்கோயில் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article