தேவகோட்டை, மார்ச் 25: தேவகோட்டையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேவகோட்டை சாமியாடி பெரிய கருப்பன் தெருவில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா துவங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிற்ார். நேற்று முன்தினம் இரவு சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் ஒத்தக்கடை கைசால விநாயகர் கோயில் முன்பிருந்து அக்னிசட்டி எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
The post மாரியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.