மாரிமுத்து நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் நாகப்பட்டினம் நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மன்னார்குடியில் வர்த்தகர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம்

1 month ago 11

மன்னார்குடி, ஜூன் 2: மன்னார்குடியில் நடந்த உணவு பாதுகாப்பு குறித்து வணிகர்களுக்கான பயிற்சி முகாமில் திரளான வர்த்தகர்கள் பங்கேற்றனர்.திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் திருப்பதி அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு குறித்து வணிகர்களுக்கு அடிப்படை பயிற்சி முகாம் மன்னார்குடியில் நடைபெற்றது. வர்த்தக சங்க தலைவர் ஆர்வி ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எஸ் எம்டி கருணாநிதி முன்னிலை வகித்தார்.இதில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலைநிலா, ஆர்த்திகா ஆகியோர் கலந்து கொண்டு, கலப்படம் இல்லாதாத முறையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்தல், பணியாளர்கள் தன்சுத்தம் பேணுதலை உறுதி படுத்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை தவறாமல் குறிப்பிடுவதன் அவசியம், பழங்கள் விற்பனையில் ரசாயன பொருட்களை கலப்படம் செய்வதால் ஏற்படும் தீமைகள், லேபில் இல்லாத பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, உணவகங்களில் பார்சல் செய்வதற்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து முறையான உணவு பேக்கிங் செய்யும் பொருட்களில் பார்சல் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பைகளை பிரிக்க ஏன் வாயில் எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ பிரிக்க கூடாது என்பது குறித்து வணிகர்களுக்கு எளிதான முறையில் பயிற்சி பெற்றனர்.. இப்பயிற்சியில், அனைத்து தரப்பு வர்த்தர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, ஹோட்டல் சங்க தலைவர் பாரதிதாசன் வரவேற்றார். வர்த்தக சங்க பொருளாளர் ஜெயச்செல்வன் நன்றி கூறினார்.

The post மாரிமுத்து நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் நாகப்பட்டினம் நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மன்னார்குடியில் வர்த்தகர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article