மாமியாரை கொன்ற மருமகன் கைது

5 hours ago 2

ராமநாதபுரம், ஏப்.23:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.காவனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மகன் மதன்குமார்(35). அரசு பஸ் கண்டக்டர். இவர், அப்பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் சிவபார்வதி(28) என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிவபார்வதின், தங்கை சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். இதனை அறிந்த மதன்குமார், கொளுந்தியாளை கண்டித்ததாக கூறப்படுகிறது. மகளை கண்டித்ததால் மாமனார் முருகேசன், மாமியார் கனகு ஆகியோர் முருகேசனை கண்டித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தாய், தந்தையுடன் கணவர் மதன்குமார் தகராறு செய்தால், மனைவி சிவபார்வதி கோபித்துக் கொண்டு மதன்குமார் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் மதன்குமார், மனைவியை அழைக்க சென்றுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத மாமியார் கனகு, மதன்குமாரை கண்டித்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கனகு ஆர்.காவலர் பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டிருந்ததை அறிந்த மதன் குமார், அங்கு சென்று இரும்பு கம்பியால் தாக்கினார். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகு நேற்று முன்தினம் இறந்தார். இதுபற்றி ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர்.

The post மாமியாரை கொன்ற மருமகன் கைது appeared first on Dinakaran.

Read Entire Article