மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு மீனவ பகுதியில் இருதரப்பினரிடையே தகராறு... இருதரப்பினரிடையே மீண்டும் ஏற்பட்ட தகராறில் 7 பேரை கைது செய்த போலீசார்

3 months ago 11
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு மீனவ பகுதியில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவி ராஜாத்தி உள்ளிட்ட ஏழு பேர் குடும்பத்தினருக்கும், பஞ்சாயத்தாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். மழைநீர் கால்வாய் அமைத்தது தொடர்பாக ராஜாத்திக்கும், பஞ்சாயத்தாருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, போலீசார் சமரசம் செய்த நிலையில், பஞ்சாயத்தார் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தகராறு தொடர்ந்த நிலையில், இன்று நடந்த சண்டையில் ராஜாத்தியின் வீட்டு ஜன்னல் கண்ணாடி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Read Entire Article