மானாம்பதி – விசூர் சாலையில் பாழடைந்த துணை சுகாதார நிலையம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை

1 month ago 12

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மானாம்பதில் பாழடைந்த துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி – விசூர் கிராம சாலையில் மானாம்பதி துணை சுகாதார நிலைய கட்டிடம் உள்ளது. இந்த துணை சுகாதார நிலையத்திற்கு மானாம்பதி, வடகாலனி மற்றும் விசூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என பல்வேறு தரப்பினர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவ்வாறான இந்த துணை சுகாதார நிலைய கட்டிடமானது, கடந்த பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து பாழடைந்து விஷ பூச்சுகளின் நடமாட்டத்துடன் காணப்படுகிறது.

தற்போது, இந்த கட்டிடத்தினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலி வாடகை கட்டிடத்தில் துணை சுகாதார நிலையத்தில் மாற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பாழடைந்த துணை சுகாதார நிலையத்திலிருந்து வெளியேரும் விஷ பூச்சுகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதால் அப்பகுதி வாசிகள் அச்சத்துடனே வசிக்க வேண்டிய நிலைவுள்ளது. எனவே, பாழடைந்த துணை சுகாதார நிலைய கட்டிடத்தினை அகற்றி அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மானாம்பதி – விசூர் சாலையில் பாழடைந்த துணை சுகாதார நிலையம்: அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article