மாநில தடகள போட்டியில் தேவகோட்டை மாணவி 3ம் இடம்

2 months ago 8

தேவகோட்டை, நவ. 14: குடியரசு தினத்தையொட்டி மாநில அளவிலான தடகள போட்டிகள் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் தேவகோட்டை தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் 9 மாணவிகளும், ஒரு மாணவரும் கலந்துகொண்டனர். இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்த பள்ளி மாணவி ஹர்ஷினி பிரியா 13.3 வினாடிகளில் இலக்கை அடைந்து மாநில அளவில் 3ம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும், நீளம் தாண்டுதலில் 5.05 மீட்டர் தூரத்தை தாண்டி வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து மாணவி ஹர்ஷினி பிரியாவுக்கு பள்ளி தாளாளர் ஜெஸ்ஸி, பள்ளி முதல்வர் ஸ்டெல்லாமேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post மாநில தடகள போட்டியில் தேவகோட்டை மாணவி 3ம் இடம் appeared first on Dinakaran.

Read Entire Article