சென்னை: “மக்கள் தொகையின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கமே சென்னையில் இன்று நடைபெறும் கூட்டம். எக்காரணம் கொண்டும் மாநில உரிமைகளையும், எங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்.” என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக இன்று மார்ச் 22-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.