“மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதியே யுஜிசி புதிய விதிகள்” - திருமாவளவன்

18 hours ago 2

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் மாநில உரிமைகளைப் பறிக்கும் சனாதன அரசியல் சதி என்றும், ஒன்றிய பாஜக அரசு உடனே இதனை திரும்பப் பெறவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பல்கலைக்கழக மானிய குழு (UGC) இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் நியமனம், பட்டப் படிப்புகள் உள்ளிட்டவை குறித்து புதிய விதிகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த விதிகள் மாநில உரிமைகளைப் பறிப்பவையாகவும் மனுவின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துபவையாகவும் உள்ளன. இவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Read Entire Article