மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கூடல் அரியநாயகிபுரம் குடிநீரேற்று நிலையத்தில் மேயர் ஆய்வு

9 hours ago 2

நெல்லை : நெல்லை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் முக்கூடல் அரியநாயகிபுரம் தலைமை குடிநீரேற்று நிலையத்தை மேயர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.நெல்லை மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ.295 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் வகையில் முக்கூடல் அடுத்த அரியநாயகிபுரம் தலைமை குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் நிலைவி வருவதால் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டி அரியநாயகிபுரம் தலைமை குடிநீர் ஏற்று நிலையத்தை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேற்று காலை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நெல்லை மாநகர பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு தட்டுப்பாடின்றி சீராக குடிநீர் கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகரட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், 13வது வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கூடல் அரியநாயகிபுரம் குடிநீரேற்று நிலையத்தில் மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article