மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

3 weeks ago 4

கோவை, அக். 22: கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் ஒப்பந்த நிறுவனம் மூலம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை போனஸ் வழங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால், இதனை தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் ஏற்கவில்லை. இந்நிலையில், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்த போனஸ் வங்கி மூலம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, ஒரு மாத ஊதியம் போனஸ் வழங்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அறிவித்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.770, டிரைவர்களுக்கு ரூ.803 சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பணி புறக்கணிப்பு செய்து தெற்கு தாலுகா அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும் எனவும், ஒப்பந்த நிறுவனம் தன்னிச்சையாக வழங்கிய போனஸ் தொகையை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

The post மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article