சென்னை: மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். உயர்கல்வி செல்லும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கும் இனி மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
The post மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்! appeared first on Dinakaran.