ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவடத்தில் உள்ள தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் 'பேனா தினம்' கொண்டாடுவதற்காக தங்கள் சட்டையில் சில எழுத்துக்களை எழுதி வைத்திருந்ததாகவும், இதனை கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், சுமார் 80 மாணவிகளின் சட்டைகளை அவிழ்க்க சொன்னதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் சட்டைக்கு மேல் அணிந்திருக்கும் பிளேசர்களை மட்டும் அணிந்து கொண்டு அந்த மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் மாவட்ட துணை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் ஆடையை அவிழ்க்க கூறியதாக தலைமை ஆசிரியர் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணை கமிஷனர் மாதவி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.