மாணவர்கள் மோதலால் முதல் தகவல் அறிக்கை பதிவு சட்ட கல்லூரி மாணவன் தேர்வு எழுத அனுமதி: சட்ட பல்கலை டீனுக்கு ஐகோர்ட் உத்தரவு

2 months ago 11

சென்னை: தரமணியில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரி மாணவன் முகமது ஆரீப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கல்லூரி மாணவர்களிடையே நடந்த மோதலில் இருதரப்பினர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் என் பெயரும் உள்ளதால், என்னுடன் சேர்ந்த சில மாணவர்களை இடைநீக்கம் செய்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கில் சிக்கிய எதிர் தரப்பு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, என்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் செமஸ்டர் தேர்வில் பங்கேற்க என்னை அனுமதிக்கும்படி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் டீனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, இன்று நடைபெறும் செமஸ்டர் தேர்வில் மனுதாரரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும், அவரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post மாணவர்கள் மோதலால் முதல் தகவல் அறிக்கை பதிவு சட்ட கல்லூரி மாணவன் தேர்வு எழுத அனுமதி: சட்ட பல்கலை டீனுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article