மாணவர்கள், ஆசிரியர்கள். கல்வி நிறுவன உரிமைக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடும் : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

3 hours ago 1

பெங்களூரு :கல்வி, சமூக நீதி, உள்ளடக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் மாநில உரிமையை பறிக்கும் யுஜிசி திருத்தங்களுக்கு எதிராக பெங்களூருவில் மாநாடு நடைபெறுகிறது. பெங்களூரில் நடந்த யுஜிசி வழிகாட்டுதல்களை எதிர்க்கும் மாநில அமைச்சர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு பேசினார்.அதில், “யுஜிசியின் சமீபத்திய வரைவு விதிமுறைகள் ஆழ்ந்த கவலைக்குரியவை. யுஜிசியின் புதிய வரைவு விதிமுறைகள் மாநில சுயாட்சியை அழித்துவிடும்.

புதிய வரைவு விதிமுறைகளை செயல்படுத்தும் முயற்சி யுஜிசியின் அத்துமீறல். யுஜிசியின் வழிகாட்டுதல்கள் மூலம் தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சி நடைபெறுகிறது. சரியான நிதி உதவியின்றி கல்வி முறையில் விதிகளை திணிப்பது நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. துணைவேந்தர்களுக்கான தேடல், தேர்வுக் குழுவில் இருந்து மாநில அரசை விலக்குவதை தமிழ்நாடு எதிர்க்கிறது. பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கு முதல் உரிமை உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள். கல்வி நிறுவன உரிமைக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மாணவர்கள், ஆசிரியர்கள். கல்வி நிறுவன உரிமைக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடும் : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article