பாலக்காடு, பிப்.18: பாலக்காடு டவுன் வடக்கு, தெற்கு காவல் நிலையங்களுக்குட்பட்ட பள்ளிகளின் மாணவர் போலீசாரின் அணிவகுப்பு பாலக்காடு பி.இ.எம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மாணவர் போலீஸ் கேடட்டின் மாவட்ட நோடல் அதிகாரியும், ஏ.எஸ்.பியுமான ஹரிதாசன் அணிவகுப்பை திறந்த வெளி ஜீப்பில் பார்வையிட்டு அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பாலக்காடு டவுன் வடக்கு சீனியர் அதிகாரி விபின் வேணுகோபால், பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலைய அதிகாரி ஆதம்கான், சதீந்தரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். பள்ளி முதல்வர்களான அஜித், சுஜித், ரஜிதகுமாரி, சின்னு, நிர்மலா, லிஸி ஜோதிஷ், ப்ரிஜா ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், ஏராளமான மாணவர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை பார்வையிட குழந்தைகளின் பெற்றோர்களும், பொது மக்களும் பலர் கலந்து கொண்டனர்.
The post மாணவர் போலீசாரின் அணிவகுப்பு appeared first on Dinakaran.