மாணவர் நிர்வாக மேம்பாடு தொடர்பான பான் ஐஐடி மாநாடு: சென்னை ஐஐடி நடத்தியது

2 weeks ago 4

சென்னை: சென்னை ஐஐடி முதன்முறையாக ‘பான் ஐஐடி மாணவர் நிர்வாகம்’ தொடர்பான மாநாட்டை அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் அதன் வளாகத்தில் நடத்தியது. மாநாட்டில், ஒட்டுமொத்த ஐஐடி சமூகத்தின் மாணவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “எந்தவொரு நிறுவனத்தையும் பொறுத்தவரை நிர்வகித்தலும் திறமையான மேலாண்மையும் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். இம்மாநாடு மாணவர் பிரதிநிதிகளிடையே நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஐஐடி வளாகங்களில் நிலவிவரும் முக்கிய பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு காண்பதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டின் முடிவுகளும் பரிந்துரைகளும் மிகத் தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

‘இளநிலை பட்டப்படிப்புக்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேலாண்மைக் கொள்கைகள்’, ‘ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் தொழில் மேம்பாடு’, ‘கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப விழா உத்திகள் பற்றிய விவாதங்கள்’ போன்றவை குறித்தும் இம்மாநாட்டில் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன. இந்த மாநாட்டையும் கடந்து நீடித்த தொடர்பு, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, அறிவுசார் அம்சங்கள் போன்றவை தொடர வேண்டியதை அவர்கள் உறுதி செய்தனர்.

The post மாணவர் நிர்வாக மேம்பாடு தொடர்பான பான் ஐஐடி மாநாடு: சென்னை ஐஐடி நடத்தியது appeared first on Dinakaran.

Read Entire Article