மோகனூர், ஜன.14: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடு தாண்டும் விழா, குதிரைபந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. வருகிற 16ம் தேதி ஊனாங்கல்பட்டி, ஒத்தையூர் ஆகிய பகுதிகளில் மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதே போல், 16ம் தேதி அணியாபுரம்புதூரில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும், 19ம் தேதி என்.புதுப்பட்டியில் குதிரைப்பந்தயம் நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து புதுக்குதிரை, சின்னகுதிரை, பெரிய குதிரைகள் கலந்து கொள்ள உள்ளது. இதே போல், இன்று மற்றும் நாளை கீழ்பாலப்பட்டி, மணப்பள்ளி, பேட்டப்பாளையம், குன்னிபாளையம், ராசிபாளையம், செல்லிபாளையம், மோகனூர் புதுத்தெரு, ராசிபாளையம், செல்லிபாளையத்தில் சிறுவர் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது.
The post மாடு பூ தாண்டும் விழா, குதிரை வண்டி பந்தயம் appeared first on Dinakaran.