மஹ்மதுல்லா, மெஹதி ஹசன் அரைசதம்; வங்காளதேசம் 244 ரன்கள் சேர்ப்பு

7 months ago 25

ஷார்ஜா,

ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தன்சித் ஹசன் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் தன்சித் ஹசன் 19 ரன்னிலும், சவுமியா சர்கார் 27 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஜாகிர் ஹசன் 4 ரன்னிலும், தவ்ஹித் ஹ்ரிடோய் 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மெஹதி ஹசன் மிராஸ் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் மெஹதி ஹசன் மிராஸ் அரைசதம் அடித்த நிலையில் 66 ரன்னில் அவுட் ஆனார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய மஹ்மதுல்லா 98 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் வங்காளதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்தது.

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக மஹ்மதுல்லா 98 ரன்னும், மெஹதி ஹசன் மிராஸ் 66 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 245 ரன் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் வங்காளதேச அணி ஆட உள்ளது.

Read Entire Article