ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதிய புற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நீலகிரியில் முதல் சீசன் துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவின் பல்வேறு பகுதிகள் மற்றும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் மூடப்பட்டுள்ளது.
மேலும், சிறிய புல் மைதானத்திற்குள் மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உள்ள மரங்களின் அடியில் உள்ள செடிகளில் பூக்கள் சேதம் அடைந்த நிலையில், அவைகளை அகற்றி விட்டு புதிய செடிகள் நடவு செய்யும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சேதமான புற்களை அகற்றி விட்டு புதிய புற்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. மேலும் நாள்தோறும் புல் மைதானங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி சமன் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
The post மழையால் பாதித்து சேதமானது: ஊட்டி தாவரவியல் பூங்காவில் புற்கள் பதிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.