மழையால் பாதித்த மதுரை ரோடுகள்ஜெர்மனி தமிழ்ப்பெண் வலைதள பதிவு

4 weeks ago 5

 

மதுரை, டிச. 16: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரையில் உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஜெர்மனியில் வசிக்கும் தமிழ் பெண் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி நாட்டில் வசித்து வருபவர் சுபாஷினி. தமிழகத்தை சேர்ந்த இவர், பல்வேறு நாடுகளுக்கு சென்று தமிழர்களின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் மரபு அறக்கட்டளை தலைவரான இவர், மதுரை வந்திருந்தார்.

மதுரையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், அவர் சமூக வலைத்தளத்தில், ‘மதுரையில் நிகழ்ச்சி முடித்து, மாசி வீதியில் இருந்து ஒரு இடத்திற்கு ஆட்டோவில் சென்றேன். அதிக அளவில் மழை பெய்ததால். மதுரை சாலைகள் பாதிக்கப்பட்டு குண்டும் குழியுமாக இருக்கிறது. ,இதனால் ஆட்டோ ஆடிய ஆட்டத்தில் கைகால்கள் எல்லாம் தனித்தனியாக விழுந்து விடும் போல உணர்வு ஏற்பட்டது. மதுரை மாநகரசபை தரப்பில் உடனடியாக இதைக் கவனித்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என., தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஆட்டோவை டிரைவர் ஓட்டிச் செல்லும் படத்துடன் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

The post மழையால் பாதித்த மதுரை ரோடுகள்ஜெர்மனி தமிழ்ப்பெண் வலைதள பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article